- சோனியா
- முதல் அமைச்சர்
- விஜய்
- ராகுல்
- தில்லி
- சென்னை
- காங்கிரஸ்
- மோடி
- நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- சோனியா காந்தி
டெல்லி: டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் சென்னை திரும்புகிறார். அரசு முறை பயணமாக முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்காமல் விஜய் சென்னை திரும்புகிறார். 2 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் விஜய் சென்னை புறப்பட்டார்.
தவெக அரசில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில் அக்கட்சி தலைவர்களை விஜய் சந்திக்காததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியை சந்திக்காமல் டெல்லியில் இருந்து விஜய் புறப்பட்டதால் காங்கிரசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜயை வரவேற்று டெல்லியில் காங்கிரஸ் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கேரள முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் விஜய் பங்கேற்கவில்லை. சென்னையில் விஜய் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்றதற்காக ராகுலை சந்தித்து விஜய் நன்றி கூறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. விஜயின் அடுத்தடுத்த புறக்கணிப்பால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
