×

கொடைக்கானலில் கொட்டியது கனமழை

கொடைக்கானல். மே 28: கொடைக்கானல் நகர் மற்றும் மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பகலில் லேசாக தென்பட்ட வெயிலும் முற்றிலும் குறைந்து குளுகுளு கிளைமேட்டிற்கு மாறியது. தொடர் மழை பெய்யும் பட்சத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்குவதுடன் பாசனத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறையின்றி கிடைக்கும் என பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்தனர்.

 

 

Tags : Kodaikanal ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது