×

உர விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

மானாமதுரை, மே 28: மானாமதுரை நகராட்சி அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உரவிலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கே.வீரபாண்டி, காமராஜ் தலைமை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சங்கையா, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், மாவட்டத் தலைவர் ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினர். ஒன்றியத் தலைவர் பரமாத்மா சிறப்புரை ஆற்றினார். மாநிலத் துணைத்தலைவர் முத்துராமு நன்றி கூறினார். உள்ளிட்ட விவசாய சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Manamadurai ,Manamadurai Municipal Office ,Union Government ,Tamil Nadu Farmers' Association ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது