சிவகங்கை, மே 28: சிவகங்கை தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு, அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன், சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தைக் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், தெப்பக்குளத்தில் படிக்கட்டுகளில் கிடந்த பை ஒன்றை சோதனை செய்ததில், இறந்தவரின் ஆதார் அட்டை இருந்தது. இதன் மூலம் அவரது பெயர் பாண்டியன்(55) என்பதும், அவர் மதகுபட்டி அருகில் உள்ள நாமனூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
