×

டாஸ்மாக் கடையை மூட கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

 

சுசீந்திரம், மே 28: நாகர்கோவில் அருகே உள்ள தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை மூட வலியுறுத்தி தெங்கம்புதூர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் ஜெபமணி தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தொடங்கி வைத்து பேசினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமரேசன், மிக்கேல் நாயகி, சிவகோபன் ஆகியோர் விளக்கி பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் முடித்து வைத்து பேசினார். இதில் சுப்பிரமணியன், நாராயணன், சமாதானம், சதாசிவம், ராஜாத்தி, அம்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Marxist ,TASMAC ,Suchindram ,Marxist Communist Party ,Thengambuthur ,Thengambuthur Government Higher Secondary School ,Nagercoil ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது