×

திருவள்ளூரில் சூறாவளி காற்று வீசியதால் டிரான்ஸ்பார்மர், 26 மின் கம்பங்கள் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது: 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை

திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் டிரான்ஸ்பார்மர் உள்பட 26 மின்சார கம்பங்கள் உடைந்து விழுந்தது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வாட்டிவைத்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. பூண்டி அருகே உள்ள நெய்வேலி ஊராட்சியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் நெய்வேலி கிராமத்தில் இருந்து பீமந்தோப்பு கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் உள்ள மின்சார கம்பங்கள் முறிந்து சாலையின் நடுவே விழுந்தன. இந்த காற்றின் காரணமாக டிரான்ஸ்பார்மர் உட்பட 26 மின் கம்பங்கள் அடுத்தடுத்து சாலையில் முறிந்து விழுந்தன. அப்போது சாலையில் யாரும்செல்லாததால் பெரும் அசம்பாவித தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் சென்று மின்சாரத்தை நிறுத்தி சாலையின் குறுக்கே முறிந்து விழுந்து கிடந்த மின்சார கம்பங்கள் அகற்றும் பணியை மேற்கொண்டனர். மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் தவித்தனர்.
‘’உடைந்துவிழுந்த மின்கம்பம் அகற்றும் பணி முடிந்ததும் புதிய கம்பம் நடப்பட்டு விரைவில் மின்சாரம் வழங்கப்படும்’ என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Thiruvallur ,THIRUVALLUR AREA ,Thiruvallur district ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக...