எரிபொருள் விலை அதிகரித்ததை அடுத்து உள்நாட்டு விமான சேவையை 22% ஏர் இந்தியா குறைக்க உள்ளதாக தகவல்!!

டெல்லி: எரிபொருள் விலை அதிகரித்ததை அடுத்து உள்நாட்டு விமான சேவையை 22% ஏர் இந்தியா குறைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் நடைமுறைச் செலவு அதிகரித்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எரிபொருள் உயர்வை காரணம் காட்டி ஏற்கனவே வெளிநாட்டு விமான சேவையை 27% ஏர் இந்தியா குறைத்துள்ளது. தற்போது வாரத்துக்கு 3,600 உள்நாட்டு சேவைகள் மற்றும் 800 சர்வதேச சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது.

Related Stories: