பாஜக.,வை மக்கள் முற்றிலுமாகத் துவம்சம் செய்து நிரந்தரமாக ஒழித்துக்கட்டுவார்கள் – அகிலேஷ் யாதவ்

லக்னோ: 2029 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக.,வை மக்கள் முற்றிலுமாகத் துவம்சம் செய்து அவர்களை நிரந்தரமாக ஒழித்துக்கட்டுவார்கள் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் உத்தரப்பிரதேசத்தின் தோல்வியடைந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என்று விமர்சித்துள்ளார். பா.ஜ.க., ஆட்சியில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்னுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மின்வெட்டு பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் மின்துறை அமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மின்துறை அமைச்சர் அழைக்கப்படவில்லையா அல்லது கலந்து கொள்ளவில்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் அகிலேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க பா.ஜ.க ம்.எல்.ஏ.,க்களும், எம்.பி.,க்களும் சொந்த அரசுக்கே கடிதம் எழுதி கோரிக்கை விடுத்தது வருவதாக அகிலேஷ் சாடியுள்ளார். இப்பொழுது பாஜகவில் நீரோட்டமே இல்லை என்று அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

Related Stories: