×

கீழடி ஆய்வறிக்கையை திருத்த முடியாது : அமர்நாத் மீண்டும் திட்டவட்டம்

சென்னை: கீழடி ஆய்வறிக்கையை திருத்த முடியாது என தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். 2014-16 காலகட்டத்தில் கீழடியில் முதலாம் கட்ட அகழாய்வு மேற்கொண்ட அறிக்கை அளித்திருந்த நிலையில் அதனை திருத்தி வழங்குமாறு ஒன்றிய அரசு தெரிவித்த நிலையில் அதனை திருந்த முடியாது என அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

எந்த அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டான் என்றும் உண்மையான மற்றும் சரியான ஆய்வுவறிக்கையை அளிப்பது எனது கடமை, அதில் இருந்து நான் தவறமாட்டான் என்று தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

கீழடி ஆய்வுவறிக்கையை 2023ல் ஒன்றிய அரசிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்தார். அறிக்கையை பெற்று 3 ஆண்டுகளாகியும் ஒன்றிய அரசு அதனை வெளியிட மறுத்து வருகிறது. ஆய்வுவறிக்கையில் மற்றம் செய்யவது என்ற பேச்சுக்கே இடமில்லை என அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

ஆய்வுவறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்திருந்த நிலையில் அறிவியல் பூர்வமாக முறையாக தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திருத்தம் மேற்கொள்ள அமர்ந்து மறுப்பு தெரிவித்தார். தற்போது மீண்டும் அறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ள திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

அமர்நாத் ராமகிருஷ்ணனனின் ஆய்வுவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தை மற்ற அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் கீழடி நாகரிக காலம் பழமையானது என்பதை ஏற்க ஒன்றிய அரசு மறுபு தெரிவிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

Tags : Keezhadi ,Amarnath ,Chennai ,Amarnath Ramakrishnan ,Union Government ,
× RELATED கோவில்பட்டி அருகே புளியங்குளம்...