- நெடுஞ்சாலைகள் துறை
- திண்டுக்கல்
- மார்க்சிஸ்ட்
- கம்யூனிஸ்டுகள்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில நெடுஞ்சாலைகள் துறை
- ஜம்புதுரை கண்ணிமார்
- ஏ. வெள்ளுடு தேவல்கர்பட்டி
திண்டுக்கல், மே 26: திண்டுக்கல் அருகே அ.வெள்ளோடு தேவழகர்பட்டியில் உள்ள பழைய ஜம்புத்துறை கன்னிமார் கோயிலை மாநில நெடுஞ்சாலை துறை நிர்வாகம் அப்புறப்படுத்த முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சரத்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அ.வெள்ளோடு தேவழகர்பட்டியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் பழைய ஜம்புத்துறை கன்னிமார் கோயில் உள்ளது.
இக்கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஒரு கால பூஜை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இக்கோயிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கன்னிமார் கோயலுக்கு பின்புறம் ரியல் எஸ்டேட் பிளாட்டுகளுக்கு பாதை ஏற்படுத்தும் நோக்கோடு நெடுஞ்சாலை துறை கோயிலையும், கோயிலை சுற்றி உள்ள மரத்தையும் அப்புறப்படுத்த முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகையால் கோயிலை அப்புறப்படுத்தும் பணியினை நெடுஞ்சாலை துறையினர் கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
