×

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் 29ம் தேதி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

 

தஞ்சாவூர், மே 26: கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் வரும் 29ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இதில் 2000 பேர் பங்கேற்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், அதைத் தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் வரும் 29ம் தேதி மாலை தஞ்சையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Tags : Thanjavur ,Karnataka government ,Communist ,Mekedaduvil dam ,Cauvery river ,Tamil Nadu… ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது