மயிலாடுதுறையில் நான்தான் ஆளுங்கட்சி மா.செ எனக்கு தெரியாமல் டெண்டர், அரசு பணிகளை செய்யக்கூடாது: தவெக நிர்வாகி அட்ராசிட்டி

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தவெக மாவட்ட செயலாளர் கோபிநாத் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சென்று வருவதுடன், நான்தான் ஆளும் கட்சி மாவட்ட செயலாளர். எனக்கு தகவல் தெரிவிக்காமல் அரசு டெண்டர் உட்பட எந்த பணிகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளக்கூடாது என்று மறைமுகமாக கூறிவதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தவெக. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தவெகவை தோற்கடித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக தவெக இருந்தாலும் அதற்கான மக்கள் பிரதிநிதிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் யாரும் இல்லை.

தமிழக முதல்வர் விஜய், அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதைதொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட தவெக செயலாளர் குட்டிகோபி (எ) கோபிநாத் அம்மா உணவகங்களை ஆய்வு செய்து வருகிறார். மேலும் கலெக்டர் அலுவலகம் முதல் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று முதல்வர் விஜய் படத்தை வழங்கி அதிகாரிகளிடம் கலந்தாலோசனை செய்து வருகிறார்.

அப்போது நான் தான் ஆளும் கட்சி மாவட்ட செயலாளர். தனக்கு தகவல் தெரிவிக்காமல் அரசு டெண்டர் உட்பட எந்த பணிகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளக்கூடாது என்று மறைமுகமாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க தான் அனைத்து அலுவலகங்களுக்கும் தவெக மாவட்ட செயலாளர் கோபிநாத் சென்று வருகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: