வாலாஜா: மாணவியை கடத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 22ம் ேததி வீட்டில் இருந்த மாணவி திடீரென காணவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்ககம், உறவினர் வீடுகள் என பல்வேறு இடங்களில் ேதடினர். எங்கு தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், வாலாஜா அடுத்த தேவதானம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(19) என்பவர், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி சென்னைக்கு கடத்தி சென்றதும், அங்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை நேற்றிரவு கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டனர். மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
