- தவெகா
- ரகுபதி
- கதம்
- புதுக்கோட்டை
- முன்னாள் அமைச்சர்
- ரகுபதி எம். எல்.
- விடி
- திமுகா
- சட்டமன்ற உறுப்பினர்
- புதுக்கோட்டை மாவட்டம்
- பொன்னமராவதி தெற்கு யூனியன்
புதுக்கோட்டை: வெற்று அறிவிப்புகள் மூலம் ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி எம்எல்ஏ கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தெற்கு ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏவுமான ரகுபதி அளித்த பேட்டி: தவெகவின் 10 நாள் ஆட்சியில் போக்சோ, வழிப்பறி வழக்குகள் எத்தனை என அரசு வெளிப்படையாக கூற முடியுமா? திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி ஆட்சியைப் பிடித்தவர்களால் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.
தினசரி பத்திரிகைகளை புரட்டினால் கஞ்சா கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட செய்திகள் குறைந்தது பத்து, பதினைந்து வருகிறது. நாங்கள் தந்த அனைத்து மகளிர் காவல்நிலையங்கள்தான் இன்று சிங்கப்பெண் திட்டமாக தந்துள்ளார்கள்.
வெற்று அறிவிப்புகளைத்தான் தற்போது வந்த ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள். 200 யூனிட் மின்சாரம் இலவசம் எனக்கூறியுள்ளார்கள். 201 யூனிட் பயன்படுத்தும்போது என்ன கட்டணம் வரப்போகிறது என்பதை எலக்ட்ரிக் பில்லை பார்த்தால் உங்களுக்கு ஷாக் அடிக்கும். இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி அல்ல என்றார்.
