×

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே நள்ளிரவில் 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை..!!

மதுரை: மதுரை மீனாட்சி கோயில் அருகே 17 வயது சிறுவன் முன்விரோதம் காரணமாக இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக குபேந்திரன் என்ற சிறுவர் கொல்லப்பட்டுள்ளார். குபேந்திரனை முத்துமணி தலைமையில் 5 பேர் கொண்ட கும்பல் கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முத்துமணி, ராஜ், சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகியோர் சேர்ந்து வணிக வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த குபேந்திரனை கொலைசெய்து முதல் தளத்திலிருந்து உடலை கீழே வீசியுள்ளனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கொலையான சிறுவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சம்பவம் தொடர்பாக விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை, கடந்தாண்டுகளோடு ஒப்பிடுகையில் மாநிலத்தில் தற்போது குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவித்தாலும், நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 கொலை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன.

Tags : Meenakshi Amman Temple ,Madurai ,Meenakshi Temple ,Kubendran ,Madurai Chitra festival ,Kubenthranai ,
× RELATED திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதியில்...