அருமனை, மே 25: அருமனை அருகே அண்டுகோடு துத்தியரக்க விளையை சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ டிரைவர். இவர் ஆட்டோவில் உத்திரங்கோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள சந்தில் இருந்து பைக்கில் ஒருவர் திடீரென வந்ததால் மெயின் ரோட்டில் ஆட்டோ மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ கவிழ்ந்து சுரேஷ் படுகாயம் அடைந்தார்.
பைக்கில் வந்தவரும் கீழே விழுந்து காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுரேஷ் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து அருமனை போலீசார் விசாரணை நடத்தினர்.
