களக்காடு,மே 25: நாங்குநேரி அருகே பரப்பாடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி திடீரென ஆய்வு செய்தார். அப்போது பணிகளின் தரம், அளவீடுகள் சரிபார்க்கப்பட்டது. ஆய்வின் போது கோட்ட பொறியாளர் ராஜசேகர், யூஜின் மற்றும் பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
