×

நத்தத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு: தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம்

 

நத்தம், மே 25: தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை சிறப்புக்குழு அமைத்து ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையொட்டி நத்தத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் அரசு வழிகாட்டுதலின்படி நத்தம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் அரசு விதிகளின் படி வாகனங்களில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அதன் மூலம் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்து மேலும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். தொடர்ந்து நத்தம் தீயணைப்புத் துறை நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள், பள்ளி வாகனங்களில் தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் அவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பாக மீட்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இந்த ஆய்வின் போது காவல், வருவாய், பள்ளிக்கல்வி மற்றும் தீயணைப்பு துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளிவாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Natham ,Tamil Nadu ,Regional ,Inspector ,Sivakumar… ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது