×

திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில் வைகாசி பிரமோற்சவ விழாவில் புஷ்ப பல்லக்கில் சாமி வீதியுலா

 

நாகப்பட்டினம், மே 25: திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில் வைகாசி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் சாமி வீதியுலா நடந்தது. நாகை மாவட்டம், திருமருகல் அருகே திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி பாணாசுரன் வழிபட்ட தலமாகவும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர்களாலும் பாடல் பெற்ற தலமாகும். ஆண்டுதோறும் வைகாசி பிரமோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே மாதம் 30ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் இரவு புஷ்ப பல்லக்கில் சாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Tags : Vaikasi Brahmotsava festival ,Tiruppugalur Agniswarar Temple ,Nagapattinam ,Agneswarar ,Temple ,Tiruppugalur ,Thirumarugal ,Agni Banasuran ,Sambandar ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது