×

சென்னையில் தொடர் மின்வெட்டு மூஞ்ச பாத்து ஓட்டு போட்டிருந்தா எம்எல்ஏ யார்னு தெரிஞ்சிருக்கும்: ஜெயக்குமார் நக்கல்

சென்னை: சென்னையில் தொடர் மின்வெட்டை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.  சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு உருவாகியுள்ளது. இதனால், ஆங்காங்கே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோடைக்கால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அறிவிக்கப்படாத இந்த மின்தடை பொதுமக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஆனால் பிரச்னையை தீர்க்காத மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் தொடர் மின்வெட்டு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:

தொடர் மின்வெட்டுன்னு ஒரு கூட்டம் கிளம்பி எம்எல்ஏ வீட்டுக்கு போய் சவுண்ட கொடுத்துருக்காங்க. அப்புறம் ஒருத்தர் வெளியே வந்து எம்எல்ஏ ஊர்ல இல்லைன்னதும் கலைஞ்சு போயிட்டாங்க. வெளிய வந்து சொல்லிட்டு போனவர்தான் எம்எல்ஏன்னு யாருக்கும் தெரியல மூஞ்ச பாத்து ஓட்டு போட்டுருந்தா தெரிஞ்சுருக்கும் பாவம்.

Tags : Chennai ,MLA ,Jayakumar Nakkal ,Former Minister ,Jayakumar ,
× RELATED கோவையில் சிறுமிக்கு நடந்த கொடூரம்...