கொலை, பலாத்காரம் டெய்லி நடக்குது… விதவிதமா விளம்பரம் செஞ்சுட்டு இருக்கீங்க.. குற்றவாளிகளை எல்லாம் அமைச்சராக்கினால் குற்றங்கள் எப்படி குறையும்? வெளுத்து வாங்கும் நயினார்

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற 13 நாட்களில் கொலை, பாலியல் குற்றம், கடத்தல், ரவுடியிசம், வன்முறை என கிட்டதட்ட 30க்கும் அதிகமான குற்றங்கள் தினசரி நடந்து வருகின்றன. திருடன் கையில் சாவி கொடுத்ததைப் போல, குற்றவாளிகளை எல்லாம் அமைச்சர் பதவியில் அமர்த்தினால் குற்றங்கள் எப்படி குறையும், அரசைக் கண்டு குற்றவாளிகளுக்கு எப்படி பயமிருக்கும்?

ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சரிசெய்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட்டுவிட்டு, வித விதமான விளம்பரப் பரப்புரைகளிலேயே முதல்வர் கவனம் செலுத்திக் கொண்டிருப்பது அவரது அனுபவமற்ற ஆளுமையைத் தான் காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு அவசரகதியில் துடிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை முதல்வர் எப்போதுதான் உணர்வார்?

Related Stories: