×

மோடி ஆட்சி கவிழும் என பேச்சு: நாட்டில் வன்முறையை தூண்ட ராகுல் காந்தி முயற்சிக்கிறார்: பாஜ கடும் கண்டனம்

 

புதுடெல்லி: ஓராண்டில் மோடி ஆட்சி கவிழும் என ராகுல் காந்தி பேசியதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அடுத்த ஓராண்டில் மோடி அரசு கவிழும் என்றும், அதற்கு விரைவில் ஏற்படப் போகும் பொருளாதார சீர்குலைவு புயல் முக்கிய காரணமாக இருக்கும் என்றும் கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: இது ஒரு சாதாரண கருத்தல்ல. நாட்டின் வன்முறையை பரப்புவதை நோக்கமாக கொண்ட தீவிர சதி. தேர்தல் களத்தில் பாஜவை வீழ்த்தவோ மோடி அரசை பதவியிலிருந்து அகற்றவோ காங்கிரசால் முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ராகுல் காந்தியும் அவரது கூட்டாளிகளும் நாடு முழுவதும் வன்முறையை தூண்ட முயற்சிக்கின்றனர்.

இந்தியா மீதான அவர்களின் வெறுப்பு மிகவும் ஆழமானது. நாட்டின் நல்லது ஏதேனும் நடந்தால் அதை அவர்களால் சற்றும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. மக்கள், பிரதமர் மோடியை மிகுந்த மரியாதையுடன் பார்க்கின்றனர். இந்தியாவை தீக்கிரையாக்க இந்தியா கூட்டணி தீட்டியுள்ள சதி ஒருபோதும் வெற்றி பெறாது. இவ்வாறு கூறி உள்ளார்.

Tags : Modi ,Rahul Gandhi ,BJP ,New Delhi ,Congress ,Lok Sabha ,
× RELATED தெருநாய்களை அப்புறப்படுத்தும்...