கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் டெல்லி அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
