சென்னை பூவிருந்தவல்லி சென்னீர்குப்பம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தது. குற்ற வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மர்மநபர்கள் தீ வைத்தனரா அல்லது மின்மாற்றியில் இருந்து விபத்து ஏற்பட்டதா என நேரில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
