சென்னை: கோவை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் ‘குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்த குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்’எனவும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
