கணவரின் புற்றுநோயை காரணம் கூறி அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கபார்ட் ராஜினாமா

 

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனல்ட் டிரம்ப் 2வது முறையாக பதவி ஏற்ற பிறகு, அமெரிக்க தேசிய உளவுத்துறையின் 8வது இயக்குநராக துளசி கபார்ட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி கபார்டு விலகி உள்ளார்.
சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டுள்ள பதவி விலகல் கடிதத்தில், “தனது கணவர் ஆபிரகாமுக்கு அரிய வகை எலும்பு புற்றுநோய் இருப்பது அண்மையில் தெரிய வந்தது. இந்த நேரத்தில் நான் என் கணவரின் இந்த போராட்டத்தில் இருந்து அவருக்கு முழு ஆதரவையும் அளிக்க விரும்புகிறேன். அதனால் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: