- கிரீட் வேளாண் அறிவியல் மையம்
- தா.பாலூர்
- மாவட்ட தோட்டக்கலை துறை
- க்ரீட் வேளாண்மை அறிவியல் மையம்
- விஞ்ஞானம்
- சென்டர்
- சோழமாதேவி க்ரீட் வேளாண் அறிவியல் மையம்
- அரியலூர் மாவட்டம்
தா.பழூர், மே 22: அரியலூர் மாவட்டம் சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் மாவட்ட தோட்டக்கலைத் துறை மற்றும் கிரீடு வேளாண் அறிவியல் மையம் இணைந்து அறிவியல் மையத்தின் வளாகத்தில் முருங்கை சாகுபடி குறித்து மாவட்ட அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துணை தோட்டக்கலை அலுவலர் அருள் வரவேற்புரை வழங்கினார். கிரீடு வேளாண் அறிவியல் மைய பெருந்தலைவர் நடன சபாபதி தலைமை உரையாற்றினார். இதில் அரியலூர் மாவட்ட முருங்கை சாகுபடி பொருளாதார முக்கியத்துவம் சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் முருங்கையில் மதிப்பு கூட்டலில் வேளாண் அறிவியல் மையத்தின் பங்கு பற்றிய வெற்றிகரமாக தொழில் முனைவோர் உருவாக்கம் பற்றியும் எடுத்துரைத்தார்..
