×

திருவெறும்பூர், எறும்பீஸ்வரர் திருக்கோயில்

தாரகாசுரன் பூலோகத்தையும் தேவலோகத்தையும் வென்று தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பிரம்மாவின் உதவியை நாடினர். திருவெறும்பூரில் உள்ள ஈசனை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும் எனவும் அதற்கான சூட்சும வழிமுறைகளையும் கூறினார்.
நேரடியாக சென்றால் தாரகாசுரன் அனுமதிக்கமாட்டான் என அறிந்து தேவர்கள் அனைவரும் எறும்பாக உருமாறி ஈசனை வழிபட முயற்சித்தனர். சிவபெருமான் அவர்களுக்காக, மலையின் மீது உள்ள ஒரு எறும்பு புற்றில் அவதரித்தார். எறும்புகளுக்கும் வணங்குவதற்கு எளிமையானஒரு வழி உண்டானது.
எறும்புகள் சிவபெருமானை வணங்குவதற்கு லிங்கத்தின் மீது ஏறும் பொழுது வழுக்கி விழுந்து கொண்டே இருந்தன. எறும்புகள் வணங்குவதற்கு ஏதுவாக சிவபெருமான தலையை சாய்த்து எறும்புகள் வழிபட வழிவகை செய்தார். எறும்புகளுக்கு அருள் தந்த காரணத்தினாலே அந்த திருத்தலம் எறும்பீஸ்வரர் திருக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.
எறும்புகள் (தேவர்கள்) மலர் தாமரை இதழைக் கொண்டு வழிபட்டு ஈசனின் அருளைப் பெற்று தேவலோகத்தை காப்பாற்றுவதற்கான வழி உண்டானது.
திருநாவுகரசரால் பாடல் பெற்ற திருத்தலமாக இது விளங்குகிறது. திருமால் மற்றும் பிரம்மா ஆகியோரும் வழிபட்ட தலமாக சிறப்புற்று விளங்குகிறது.
புற்றுவடிவிலே ஈசன் உள்ளதால் இங்கு அபிஷேகம் கவசம் அணிவித்து பின்னரே நடைபெறுகிறது.
இங்குள்ள தெய்வத்திற்கு சாயா கிரகங்களைத் தவிர மற்ற ஏழு கிரகங்களும் நாமகரணம் செய்துள்ளது.
*பௌர்ணமி நாளில் அல்லது கிருத்திகை நட்சத்திரம் அன்றோ ஏழுவகை தானியங்களை ஒன்றாக கலந்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்பு அதனை எறும்புகளுக்கு கொடுக்க உங்களின் மனோபலம் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு ஞாபகசக்தி அதிகரிக்கும். குழந்தைகளும் நன்கு படிப்பார்கள்.
*அனுஷ நட்சத்திர நாளில் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு பாலில் செய்த இனிப்பை நைவேத்யமாக கொடுத்து பிரார்த்தனை செய்தால் கடன் தொடர்பான பிரச்னைகள் குறையும்.
*அவரவரின் சுய ஜாதகத்தில் லக்னத்திற்கு 6ம், 8ம், 12ம் பாவகத்தில் சந்திரன் இருந்தால் அமாவாசை நாளில் சுவாமிக்கு தயிர் மற்றும் பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து எறும்புகளுக்கு உணவளித்தால் சந்திரனின் கெடுபலன் நீங்கும்.
*அவரவர் நட்சத்திரத்திலிருந்து 6வது நட்சத்திர நாளில் செந்தாமரை மாலை சுவாமிக்கு சாற்றி பாலில் உணவையும் ஏழு வகையான தானியங்களையும் நைவேத்யம் செய்து எறும்புகளுக்கு தானியங்களை வழங்க திருமணம் விரைவில் நடைபெறும்.
*சிவராத்திரி அன்று ஒரு அத்தி மரத்தை நட்டு பராமரித்து பாதுகாத்து வளர்த்தால் எப்படிப்பட்ட கர்மமும் தோஷமும் நீங்கும். வாழ்வில் வளமும் செல்வமும் நீங்கா புகழும் பெறுவார்கள். உலகத்திலே தூங்காத உயிரினம் எறும்பு. அந்த எறும்பே வழிபட்ட சிறப்பிற்குரிய திருத்தலமாக விளங்குகிறது இத் திருக்கோயில்.

Tags : Thiruverumpur ,Erumbeeswarar Temple ,Tarakasura ,Brahma ,
× RELATED செவ்வாய் தோஷமா?