×

40 அடி ஆழ தொட்டியில் இறங்கிய நால்வருக்கு காத்திருந்த அதிர்ச்சி- ICUவில் அனுமதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் இயங்கிவரும் நிறுவனத்தில் 40 அடி ஆழமுள்ள வேஸ்ட் ஆயில் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய தொழிலாளர்கள் 4 பேர் மயங்கி விழுந்தனர்.

இதனை பார்த்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் யுனைடெட் இண்டஸ்ட்ரீஸ் பிளாஸ்டிக் பி.லிட் என்ற நிறுவனம் இயங்கிவருகிறது இந்நிறுவனம் ஹூண்டாய் கார்களுக்கு பயன்படுத்தும் என்ஜின் மோல்டிங் போன்ற உதிரி பாகங்கள் தயாரிக்கும் வென்டார் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இன்று அங்கு பணியில் இருந்த மணிகண்டன், விக்னேஷ், மதன்ராஜ், ஸ்ரீதர் ஆகிய நான்கு பேரும் 40 அடி ஆழமுள்ள ஆயில் வேஸ்ட் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கியுள்ளனர். அப்போது நான்கு பேரும் மயங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அவர்களை காப்பாற்ற சக பணியாளர்கள் உள்ளே இறங்கியுள்ளனர். உடனே நான்கு பேரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் நான்கு பேரும் மூச்சுதிணறல் காரணமாக அவதிப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kanchipuram ,Pillaipakkam Chipkot ,Sriperumbudur ,
× RELATED அரக்கோணத்தில் நீண்ட நாள் கோரிக்கைகளை...