×

அமெரிக்காவில் விமானப்படைத் தள கண்காட்சியில் நடுவானில் மோதிய 2 போர் விமானங்கள்; 4 விமானிகள் உயிர் தப்பினர்

‘Gunfighter Skies’ விமானக் கண்காட்சியின்போது நிகழ்ந்த விபத்தில் சிக்கிய நான்கு விமானிகளும், விமானத்திலிருந்து வெளியேறும் பாதுகாப்பு அமைப்பைப் (eject) பயன்படுத்தித் தப்பித்தனர். ஐடஹோ மாநிலத்திலுள்ள Mountain Home விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற உள்ளூர் விமானக் கண்காட்சி, இரண்டு போர் விமானங்கள் நடுவானில் மோதித் தரையில் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. விபத்தில் சிக்கிய விமானக் குழுவைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் விமானத்திலிருந்து வெளியேறித் தப்பித்ததாகவும், தற்போது மருத்துவக் குழுவினர் அவர்களைப் பரிசோதித்து வருவதாகவும், அமெரிக்கப் பசிபிக் கடற்படையின் விமானப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நான்கு விமானிகளும் வானில் சாகசப் பயிற்சிகளை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ​​உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12:10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. வாஷிங்டன் மாநிலம் விட்பி தீவைச் சேர்ந்த ‘Electronic Attack Squadron (VAQ) 129’ பிரிவைச் சேர்ந்த, கடற்படையின் இரண்டு EA-18G ரக விமானங்களில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளியில், இரண்டு போர் விமானங்கள் நடுவானில் மோதியதும், கருமையான புகை மண்டலத்திற்கு இடையே தீப்பிடித்த நிலையில் சுழன்று கொண்டு தரையை நோக்கி விழுந்து நொறுங்கும் காட்சி பதிவாகியிருந்தது. விபத்து நடந்த இடத்திற்கு அருகே நான்கு பாராசூட்டுகள் (parachute) விரிந்து விமானிகள் கீழே இறங்கும் காட்சியும் அதில் தெரிந்தது.

இதனை தொடர்ந்து விமான சாகச நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக மவுண்டன் ஹோம் காவல்துறையினர் அறிவித்ததுடன், விமான படை தளத்திற்கு பொதுமக்கள் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் கூறியுள்ளனர்.

Tags : US ,Gunfighter Skies' air ,Mountain Home Air Force Base ,Idaho ,
× RELATED தவெக அரசுக்கு ஆதரவளித்த 25 அதிமுக...