சென்னை: ஆனைமங்கலம் செப்பேட்டை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதளம் பதிவில் கூறியிருப்பதாவது:
நெதர்லாந்தின் லெய்டன் நகரில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, நமது பண்பாட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வரலாற்றுப் பயணத்தில் மிகுந்த வரவேற்பிற்குரிய முன்னேற்றமாகும்.
இந்த அரிய செப்பேடுகள் வெறும் தொல்பொருள் சின்னங்கள் அல்ல; தமிழர்களின் மகத்தான வரலாறு, பண்பாடு மற்றும் சோழப் பேரரசின் மகோன்னதத்தைப் பதிவு செய்த நிரந்தரச் சான்றுகள். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
