- திமுகா தவார் மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- திமுகா தலவார் மு. கே. ஸ்டாலின்
- திருவாரூர்
- சட்டமன்ற உறுப்பினர்
- பூண்டி கலைவனன்
- திமுக தலைவர் மு. கே. ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சை செல்கிறார். திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் மகள் திருமண விழா நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தஞ்சை செல்கிறார். இதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை விமானத்தில் திருச்சி வருகிறார்.
அவருக்கு விமான நிலையத்தில் திருச்சி மாவட்ட திமுக சார்பில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து காரில் தஞ்சை செல்லும் ஸ்டாலினுக்கு தஞ்சை மாவட்ட எல்லையான செங்கிப்பட்டியில் மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் அவர் காரில் சங்கம் ஓட்டல் சென்று இரவு அங்கு தங்குகிறார். நாளை காலை தஞ்சை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மகாராஜா மகாலில் நடைபெறும் பூண்டி கலைவாணன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசுகிறார். அதை முடித்துக் கொண்டு மீண்டும் திருச்சி விமான நிலையம் சென்று சென்னை திரும்புகிறார்.
