×

திருஎருக்கத்தம் புலியூர், நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்

கைலாயத்தில் சிவபெருமான் வேதங்களின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்துக்கொண்டிருக்கும் பொழுது பார்வதியின் கவனம் சிதறியது அதனால் பார்வதி தேவியை மீண்டும் பூமியில் பிறக்க வேண்டும் என சிவபெருமான் சபித்தார். இதனால் தன் தாயை சபித்ததை கண்ட முருகப் பெருமான் கோபம்கொண்டு ஆகம நூல்களை கடலில் வீசி எறிந்தார்.
முருகனின் இச்செயலுக்காக இறைவன் அவரை மதுரையில் கணபதி என்பவரின் மகனாக ருத்திரசர்மா என்ற பெயரில் பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். உரிய வயது வந்த பொழுது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடுசெய்தார். கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேசும் திறனை பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் திருக்குமாரசாமி என்ற பெயரிலும் விளங்குகிறார். ருத்திரசர்மாவின் உருவம் இக்கோயிலில் உள்ளது.
இத்தலத்தின் பெருமையை கேட்ட தேவர்களும், முனிவர்களும் இங்கேவந்து பறவையாகவும் மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு வந்தனர். அங்கேவந்த வேடர்கள் பறவைகளை கொல்லவும் மரங்களை வெட்டவும் முயன்றனர். தேவர்கள் இறைவனிடம் முறையிட அவைகள் யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி இத்தலத்தில் இறைவனை வழிபட்டனர். சுவேதன் என்ற மன்னன் முன்வினைப் பயனால் வெண்குஷ்டத்திற்கு ஆளான இந்த மன்னன் எருக்கத்தம் புலியூர் திருத்தலத்தில் நீராடி சிவபூஜை செய்து நோய் நீங்கப் பெற்றார்.
எருக்கத்திற்கு வெண்குஷ்டத்தை போக்கும் சக்தி உண்டு. திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற திருத்தலம் பஞ்சப்புலியூர் திருத்தலங்களில் முதல் ஸ்தலமாக உள்ளது.
இங்குள்ள சுவாமியின் பெயர் நீலகண்டேஸ்வரர், சுவேதார்க்கவனேஸ்வரர், திருக்குமாரசாமி என்ற நாமங்களில் அழைக்கப்படுகிறது. இறைவியார் நீலமலர்கண்ணி, நீலோற்பலாம்பாள் என்ற நாமங்களில் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள தெய்வங்களுக்கு சூரியன், செவ்வாய், சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களால் நாமகரணம் செய்யப்பட்டுள்ளது.
*பௌர்ணமி நாளில் அல்லது அவரவர் இரண்டாவது நட்சத்திரம் தொடங்கி வெள்ளெருக்கு மாலை சாட்சி எள்ளுருண்டை சாமிக்கு நெய்வேத்தியம் செய்து வழங்கினால் பேச்சு வராதவர்களுக்கு பேச்சு வரும் திறனைப் பெறுவார்.
*ஜென்ம நட்சத்திரம் ஆறாவது நட்சத்திரத்தில் கலந்து உச்சமான வெள்ளெருக்கு மரத்திற்கு கட்டு நூல்கள் தொட்டில் செய்து கட்டி சாமிக்கு மாம்பழக் கனிகளை நைவேத்தியம் செய்து அதை உணவாக எடுத்து வந்தால் பிள்ளை பேறு உண்டாகும் .
*அமாவாசை நாளில் சுவாமிக்கு பார்லி அரிசியை பாலில் கலந்து சுவாமிக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வெள்ளெருக்கு மரத்தை பதினொரு முறை (11) சுற்றி வந்தால் வெண்குஷ்டம் போன்றவை நீங்கி நற்பேறு உண்டாகும். இந்த திருத்தலத்தில் வெள்ளெருக்குச்செடியை நட்டு பராமரித்துவந்தால் எப்படிப்பட்ட நோயும் குணமாகும். இது பாடல் பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.

Tags : THIRUERUKTHAM PULIUR ,Sivaperuman ,earth ,Shivaperuman ,Kailaya ,Murugabe ,
× RELATED இந்த வார விசேஷங்கள்