×

ஐஎஸ்எல் கால்பந்து பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதல்

சென்னை: ஐஎஸ்எல் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று, சென்னையின் எப்சி – பெங்களூரு எப்சி அணிகள் மோதுகின்றன. ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை 5 மணிக்கு, சென்னையின் எப்சி – பெங்களூரு எப்சி அணிகள் இடையிலான கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.

நடப்பு தொடரில் சென்னை அணியின் கடைசி போட்டி இது. சென்னை – பெங்களூரு அணிகள் இடையே இதுவரை, 17 போட்டிகள் நடந்துள்ளன. அதில், சென்னை 4 போட்டிகளிலும், பெங்களூரு அணி 10 போட்டிகளிலும் வென்றுள்ளன. 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி, 9 புள்ளிகளுடன் 9ம் இடத்திலும், பெங்களூரு அணி, 20 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் உள்ளன.

Tags : ISL Football ,Chennai FC ,Bengaluru FC ,Chennai ,ISL Cup football ,Jawaharlal Nehru Indoor Stadium ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி..!