×

மருத்துவ மாணவி பலாத்கார கொலை 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்: மேற்கு வங்க பாஜ அரசு அதிரடி

கொல்கத்தா: கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார கொலை வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை மேற்கு வங்க பாஜ அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2024ல் பயிற்சி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் மருத்துவமனை ஊழியர் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் மாநில தலைமைச் செயலகத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், கொல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் வினீத் கோயல் மற்றும் முன்னாள் துணை ஆணையர்கள் இந்திரா முகர்ஜி, அபிஷேக் குப்தா ஆகியோருக்கு எதிராகத் துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்.ஜி. கர் பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கை தவறாகக் கையாண்டதில் அந்த மூன்று அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாகவும்,பெண்ணின் பெற்றோருக்கு லஞ்சமாகப் பணம் வழங்கியதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தற்போது சிபிஐயால் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றக் கண்காணிப்பில் உள்ள உண்மையான குற்றவியல் விசாரணையில் மாநில அரசு தலையிடவில்லை. தலைமைச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ், மாநில உள்துறைச் செயலாளர் ஒழுங்கு நடவடிக்கைகளையும் துறைசார் விசாரணையையும் மேற்பார்வையிடுவார் என்றார்.

Tags : West Bengal BJP government ,Kolkata ,R.G. ,R.G. Ghar Hospital ,
× RELATED ஒன்றிய அரசு அறிவிப்பு ஜூன் 21ம் தேதி...