16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் வரும் 30ல் தொடக்கம்: டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் நடக்கிறது; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

புதுடெல்லி: 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வரும் 30ம் தேதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் தொடங்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது. இதுவரை 2 கட்டமாக பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, உபி, ராஜஸ்தான், மபி, குஜராத், சட்டீஸ்கர், கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 3ம் கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் வரும் 30ம் தேதியிலிருந்து மேற்கொள்ளப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பான தேர்தல் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 3ம் கட்ட எஸ்ஐஆர் பணிகள் டெல்லி, ஒடிசா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர், உத்தரகாண்ட், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அரியானா, சண்டிகர், தெலங்கானா, பஞ்சாப், கர்நாடகா, மேகாலயா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், நாகாலாந்து, திரிபுரா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, மற்றும் தமன் மற்றும் டையூ ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்பணிகள் வரும் 30ம் தேதி முதல் பல்வேறு காலகட்டங்களில் தொடங்கி இறுதியாக அக்டோபர் 14ம் தேதியுடன் நிறைவடையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: