கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தவிலை பண வீக்கம் 8.3 சதவீதமாக அதிகரிப்பு: 42 மாதங்களில் இல்லாத உச்சம்

 

புதுடெல்லி: மொத்த விலை பண வீக்க விவரங்களை ஒன்றிய தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: நாட்டின் மொத்த விலைப் பண வீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 42 மாதங்களில் இல்லாத உச்சமாகும். கடந்த மார்ச் மாதத்தில் 3.88 சதவீதமாகவும் பிப்ரவரியில் 2.26 சதவீதமாகவும் மட்டுமே இருந்தது. கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணம். கடந்த ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி விலை 24.71 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது மார்ச் மாதத்தில் 1.05 சதவீதமாக மட்டுமே இருந்தது. இதுபோல் உணவு பொருட்கள், கனிமங்கள், உணவு சாராத பொருட்கள் பண வீக்கம் 9.17 சதவீதமாகவும், உணவு பொருட்கள் விலை 2.31 சதவீதமாகவும் .யர்ந்துள்ளது. காய்கறி, பழங்கள், முட்டை, இறைச்சி, மீன் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. உற்பத்தி துறை பண வீக்கம் 4.62 சதவீதமாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: