2006 திமுக ஆட்சியில் பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு டெய்லி அட்டன்டன்ஸ் போடல: உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு பதிலடி

 

சென்னை,: பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க டெய்லி அட்டன்டன்ஸ் போட்டுட்டு இருக்கல என்று முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி ெகாடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு முதல்வருக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க டெய்லி அட்டன்டன்ஸ் போட்டுட்டு இருக்கல. நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே.

அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராகவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா சிஎம் சார்? 2006ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, போஸ்ட் பண்ணியிருக்கீங்களே, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு எம்எல்ஏக்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, சோபா செட் அனுப்பியோ அமைக்கப்பட்ட
ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல. திமுக 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்க்கட்சியா எங்களோட வெற்றி. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Related Stories: