நடிகர் விஜய் முதல்வராக பதவியேற்பு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு இல்லை: திரிஷா உள்பட நண்பர்கள் பங்கேற்பு

 

 

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேற்று காலை 10.17 மணியளவில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த பதவியேற்பு விழாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதுகுறித்து நடிகர் சங்க தரப்பில் வெளியான குறுந்தகவலில், ‘நடிகர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்ற விழாவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு எந்த அழைப்பும் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட யாரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை.

விஜய் பதவியேற்பு விழாவில் அவரது திரையுலக நண்பர்கள் நடிகர்கள் ஜெய், மன், சஞ்சீவ் மற்றும் தயாரிப்பாளர்கள் டி.சிவா, எஸ்.எஸ்.லலித்குமார், அர்ச்சனா கல்பாத்தி, டி.சிவா, கே.வெங்கட் நாராயணா, பாடலாசிரியர் விவேக் மற்றும் மன்சூர் அலிகான், சங்கீதா கிரிஷ், பாடகர் கிரிஷ் கலந்துகொண்டனர். நடிகை திரிஷா தனது தாயார் உமா கிருஷ்ணனுடன் பங்கேற்றார். அப்போது அவர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரனை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். பதவியேற்பு விழா முடிந்தவுடன் வெளியே வந்த திரிஷா நிருபர்களிடம் கூறுகையில், ‘முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள்’ என்று சொன்னார்.

 

Related Stories: