முதல்வர் விஜய்க்கு புதிய செயலாளர்கள்: தலைமை செயலாளர் சாய்குமார் அறிவிப்பு

 

சென்னை: முதல்வர் ஜோசப் விஜய்க்கு புதிய செயலாளர்கள் நியமித்து தலைமை செயலாளர் சாய்குமார் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக நேற்று பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்யின் அலுவலக நிர்வாகத்தை வலுப்படுத்தும் வகையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நிர்வாக அனுபவம் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றிய திறனை கருத்தில் கொண்டு, தற்போது சுகாதாரத்துறையில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சமூகநலத் திட்டங்கள் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பில் அனுபவம் பெற்றவரான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக பணியாற்றி வந்த லட்சுமி பிரியா, முதலமைச்சரின் இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டு தலைமை செயலாளர் சாய்குமார் அறிவித்துள்ளார்.

புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் அலுவலகத்தின் நிர்வாக செயல்பாடுகளை வேகப்படுத்தவும், அரசின் முக்கிய திட்டங்களை ஒருங்கிணைக்கவும் செயலாளர்கள் நியமனங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், புதிய அமைச்சரவை மற்றும் நிர்வாக மாற்றங்கள் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: