×

ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு..! இந்திய அளவில் 148 பேர் தேர்ச்சி: சென்னை மாணவி ரவி லட்சுமிபிரியா முதல் இடத்தை பிடித்தார்

சென்னை: ஐஎப்எஸ் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்திய அளவில் 148 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 17 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சென்னை மாணவி ரவி லட்சுமிபிரியா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஎப்எஸ் (இந்திய வனப்பணி) பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. 2025ம் ஆண்டுக்கான 150 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. முதலில் முதல்நிலை தேர்வு எழுத்து நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 16 முதல் 23ம் தேதி வரை மெயின் தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி மெயின் தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நேர்காணல் நடைபெற்றது. இந்த நிலையில் நேர்முக தேர்வு முடிந்து நேற்றிரவு யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் இறுதி தேர்வு முடிவை வெளியிடப்பட்டது. இதில், இந்தியா முழுவதும் 148 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 15 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி சங்கர் கூறியதாவது:
ஐஎப்எஸ் தேர்வுக்கான நேர்காணல் முடிவடைந்ததையடுத்து இறுதி தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in வெளியிட்டது. இந்திய அளவில் 148 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 148 பேரில் 84 பேர் சங்கர் ஐஏஎஸ் அகடாமி மாணவர்கள். சென்னை, டெல்லி, பெங்களூர், திருவனந்தபுரம் மையங்களில் படித்தவர்கள். முதல் 10 இடங்களில் 6 இடங்களை எங்கள் மாணவர்கள் கைப்பற்றி உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 14 மாணவர்கள் எங்கள் மையத்தில் படித்தவர்கள். தேர்ச்சி பெற்றவர்களில் இதில் 5 பேர் பெண்கள். எங்களது ஜிஎஸ்பிசிஎம் அறக்கட்டளை பாடநெறி மாணவியான ரவி லட்சுமிப்பிரியா, அகில இந்திய அளவில் 9வது இடத்தைப் பிடித்து, தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் சென்னை மாம்பலத்தை சார்ந்தவர் ஆவார்.

அகில இந்திய அளவில் சித்தார்த் அகில இந்திய அளவில் 3வது இடமும், ஆஞ்சல் சர்மா அகில இந்திய அளவில் 5வது இடமும், அனூப் ரெட்டி அகில இந்திய அளவில் 6வது இடமும், சங்கல்ப் தீட்சித் 8வது இடமும், ரவி லட்சுமிப்பிரியா 9வது இடமும், அஷ்வனி குமார் ராய் 10வது இடமும் பிடித்துள்ளனர். இவ்வாறு வைஷ்ணவி சங்கர் கூறினார்.

Tags : IFS ,India ,Chennai ,Ravi Lakshmi Priya ,Tamil Nadu ,government ,
× RELATED தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர்...