×

திமுக – அதிமுக கூட்டணி அமைவது சாத்தியம் என கருதவில்லை – டி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத அளவு உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் சூழலில், அதனை மேலும் அதிகரிக்கும் விதமாக திமுக – அதிமுக கூட்டணி அமைய உள்ளதாக கடந்த 2 நாட்களாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி அமைவது சாத்தியமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த டி.கே.எஸ். இளங்கோவன், நீங்கள் சொல்லுகின்ற கூட்டணி அமைவது சாத்தியம் என்று நான் கருதவில்லை. ஏனெனில், தமிழக அரசியலில் திமுக-வும், அதிமுக-வும் பரம எதிரிகளாகத் திகழ்கிறோம் என்று கூறினார். ஒருசில பேர் இடையில் வருவார்கள், போவார்கள். தவெகவு-க்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், எதிர்க்கட்சியாக திமுக எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காகவே ஆலோசனை நடந்தது என்று கூறினார்.

பெரும்பான்மையை நிரூபிக்க தேவைப்படும் எம்எல்ஏ-க்களின் ஆதரவு இல்லாமல் தவெக திண்டாடி வரும் நிலையில் திமுக – அதிமுக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகத் தகவல் வெளியான நிலையில், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனின் மேற்கண்ட கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags : DIMUKA ,DIMUKA ALLIANCE ,T. K. S. Ilangovan ,Chennai ,
× RELATED மேற்குவங்க எஸ்ஐஆர் விவகாரங்களை...