×

வேன் மீது மொபட் மோதி முதியவர் பலி

 

திருப்பூர், மே 7: திருப்பூர், டி.சி.மார்க்கெட், குருநாத வீதியைச் சேர்ந்தவர் முகமது அயூப் (77). இவர் நேற்று முன் தினம் அவினாசி- திருப்பூர் ரோட்டில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அணைப்புதூர் அருகே வந்தபோது சாலையோரம் நின்ற வேன் மீது மொபட் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது அயூப்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Tiruppur ,Mohammed Ayub ,Gurunath Road, D.C. Market, Tiruppur ,Avinashi-Tiruppur road ,Dampudur ,
× RELATED சித்தோட்டில் நகை திருடிய வாலிபர் கைது