உடுமலை,மே 6: கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 21-ம் தேதி துவங்கியது. வரும் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, தினசரி சிறப்பு பூஜைகள், அபிசேகங்கள், ஆராதனைகள், அன்னாபிசேகம், அம்மன் ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடைபெற்று வருகிறது.
திருவிழாவில் பூவோடு ஊர்வலம் நடந்தது.நேற்று ஏராளமான பக்தர்கள் அமராவதி ஆற்றில் குவிந்தனர். இரவு திருக்கல்யாண நிகழ்வு நடந்தது. இதில் குமரலிங்கம், பாப்பான்குளம், பெருமாள்புதூர், மடத்தூர், மயிலாபுரம், கரட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவிழாவையொட்டி, தினசரி கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
