- பிரதம செயலாளர்
- டிஜிபி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தவெகா
- விஜய்
- முதலமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- நேரு உட்புற மைதானம்
- சென்னை…
சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா குறித்து தலைமை செயலாளர், டிஜிபி ஆலோசனை நடத்தினர். தமிழகத்தின் புதிய முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தலைமை செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர், சென்னை மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
