கோவை: துடியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையால், அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இருந்த பெரிய மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. மரம் விழுந்ததில் பள்ளியின் சுற்றுச் சுவர், சோலார் மின் தகடுகள் ஆகியவை சேதமடைந்துள்ளது.
