- Ezhilur
- அங்கன்வாடி நிலையம்
- திருத்துறைப்பூண்டி
- சூறாவளி
- எழிலூர் செல்லியம்மன் கோயில்
- எழில்லூர் பஞ்சாயத்து
- திருவாரூர்
திருத்துறைப்பூண்டி, மே 1: எழிலூரில் கஜா புயலால் சேதமடைந்தது. இதனால் புதிய அங்கன்வாடி மையம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் ஊராட்சி எழிலூர் செல்லியம்மன் கோவில் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த அங்கன்வாடி மையம் சேதமடைந்த காரணத்தால், கடந்த 2018- 19 கஜா புயலின் போது சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது தற்போது குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் விடுமுறை காலத்திலேயே கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
