மன்னார்குடி, மே 1: கோட்டூரில் வாலிபரை மிரட்டிய ட்ரம்செட் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (27). ட்ரம்செட் அடிக்கும் தொழி லில் ஈடுப்பட்டு இவர் கடந்த மாதம் பெரியகுடி பாலத்தில் தனது நண்பர்கள் இருவரோடு அமர்ந்து மது குடித்து கொண்டி ருந்தனர்,அப்போது அங்கு வந்த பெரியகுடி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் யாருடா நீங்க, இங்க வந்து தண்ணி அடிக்கிறீங்க என்று கேட்டபோது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது, மது குடிப்பதை தட்டிக் கேட்ட இருவரை மணிகண்டன் பீர் பாட்டிலை உடைத்துக் கொண்டு குத்துவதற்கு முயற்சித்தபோது , அங்கு வந்த ஆற்றங்கரை தெருவை சேர்ந்த நவீன்தரன் ( 20) என்பவர் இரு தரப்பினரையும் சமாதனம் செய்துள்ளார். இந்த நிலையில், நவீன்தரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டூர் கடை வீதிக்கு வந்துள்ளார்.
அதை அறிந்த மணிகண்டன் தனது நண்பர்கள் இருவரோடு வந்து நவீன் தரனை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப் படுகிறது.இது தொடர்பாக நவீன்தரன் கோட்டூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ ராஜா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
