×

பரமத்திவேலூர் வட்டாரத்தில் பலத்த மழையால் வெப்பம் தணிந்தது

பரமத்திவேலூர், மே 1: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நாள்தோறும் 102 டிகிரிக்கு மேல் வெப்பத்தின் தாக்கம் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், இரவு சுமார் 9 மணிக்கு லேசான காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பரமத்திவேலூர், கபிலர்மலை, ஜேடர்பாளையம், மெடிக்கல் பாளையம், கந்தம்பாளையம், நல்லூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுமார் 30 நிமிடங்களுக்கு மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Paramathevellur ,Namakkal district ,
× RELATED பள்ளிபாளையம் நகராட்சி ஆபீஸ் முன் ஒரு...