×

ஒடுவன்குறிச்சி மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

நாமகிரிப்பேட்டை, ஏப்.30: நாமகிரிப்பேட்டை அடுத்த ஒடுவன்குறிச்சி மாரியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக கூடி, அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, மாநில திமுக அயலக அணி துணை செயலாளர் முத்துவேல், சீராப்பள்ளி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இவ்விழாவில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். கோயில் நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் இணைந்து விழாவை நடத்தினர்.

Tags : Oduvankurichi Mariamman Temple Chariot Festival ,Namagiripettai ,Oduvankurichi Mariamman Temple ,Thimithi festival ,
× RELATED வாக்குச்சாவடிகளுக்கு முதியவர்களை...